weather update  
சுற்றுச்சூழல்

‘அடமழை காத்திருக்கு…” நாளை எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!!

விழுப்புரம் ராமநாதபுரம் ராணிப்பேட்டை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு...

மாலை முரசு செய்தி குழு

தமிழகத்தில் பருவ மழை தொடங்கி விட்டது. மாநிலம் முழுவதுமே நல்ல மழை பெரிது வருகிறது. தீபாவளியான இன்றும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை விட்டு விட்டு பொழிகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நாளை ராமநாதபுரம் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை கடலூர், புதுவை, காரைக்கால் மிக கனமழை வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல நாளை திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விழுப்புரம், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர் சிவகங்கை மாவட்டங்களில் கன மழை வாய்ப்பு. 

22 ஆம் தேதி - ராமநாதபுரம் புதுக்கோட்டை தஞ்சாவூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை கடலூர் மற்றும் புதுவை காரைக்காலில் மிக கனமழைக்கு வாய்ப்பு. அதேபோல கன்னியாகுமரி திருநெல்வேலி தூத்துக்குடி விழுப்புரம் செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர் சிவகங்கை மதுரை விருதுநகர் தேனி தென்காசி திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கன மழை வாய்ப்பு. 

23 ஆம் தேதி - விழுப்புரம் ராமநாதபுரம் ராணிப்பேட்டை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் மிக கனமழை வாய்ப்பு. அதேபோல 23ஆம் தேதி வேலூர் திருப்பத்தூர் கள்ளக்குறிச்சி கடலூர் மயிலாடுதுறை நாகப்பட்டினம் தஞ்சாவூர் திருவாரூர் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் கனமழை வாய்ப்பு உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

24 ஆம் தேதி சென்னை திருவள்ளூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழைக்க வாய்ப்பு. அதேபோல கிருஷ்ணகிரி தர்மபுரி திருப்பத்தூர் திருவண்ணாமலை விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுவை கனமழைக்கு வாய்ப்பு. 

25 ஆம் தேதி கோவை நீலகிரி ஈரோடு தர்மபுரி கிருஷ்ணகிரி திருப்பத்தூர் திருவண்ணாமலை வேலூர் ராணிப்பேட்டை சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.