சுற்றுச்சூழல்

மும்பை பங்கு சந்தை: சென்செக்ஸ் குறியீடு 400 புள்ளிகள் உயர்வு

மும்பை பங்கு சந்தை இன்று வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே 400 புள்ளிகளுக்கு மேல் உயர்வை கண்டுள்ளது.

Malaimurasu Seithigal TV

மும்பை பங்கு சந்தை இன்று வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே 400 புள்ளிகளுக்கு மேல் உயர்வை கண்டுள்ளது.

தளர்வுகளுக்கு பிறகு அளப்பரிய முன்னேற்றத்தை கண்டு வரும் மும்பை பங்கு சந்தை இன்று மீண்டும் உயர்வை கண்டுள்ளது.

அதன்படி மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே 400 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 59 ஆயிரத்து 787 ஆக நிலைக் கொண்டு வர்த்தகமாகியுள்ளது.

இதேபோல் தேசிய பங்கு சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும் 124 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 17 ஆயிரத்து 750 என நிலைக் கொண்டு வர்த்தகமாகியுள்ளது.

இதில் ஐடி, உலோகம் மற்றும் பொதுத்துறை நிறுவனப் பங்குகள் சந்தையில் குறிப்பிடத்தக்க லாபத்தை ஈட்டியுள்ளன. தேசிய பங்கு சந்தையில்  உலோகம் மற்றும் ஐடி துணைக் குறியீடுகள் தலா 1 சதவீதம் அளவுக்கு உயர்வை கண்டன.