மற்றவை

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 320 குறைவு..!

Malaimurasu Seithigal TV

கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு, 320 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் தங்கம், 43 ஆயிரத்து, 840 ரூபாய்க்கும், கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் தங்கம், 5 ஆயிரத்து, 480 ரூபாய்க்கும், விற்பனை ஆகிறது.

இதே போன்று, வெள்ளியின் விலையும் குறைந்து காணப்படுகிறது. அதன்படி, கிராமுக்கு, ஒரு ரூபாய் குறைந்து, ஒரு கிராம் வெள்ளி 77 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 77 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.