மற்றவை

கூகுள் போட்டோஸ் இலவச சேவை இன்று முதல் நிறுத்தம்...

கூகுள் போட்டோஸ் இலவச சேவை இன்று முதல் முடிவடைவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

Malaimurasu Seithigal TV

இன்று முதல் கூகுள் ஸ்டோரேஜில் புகைப்படங்களை இலவசமாக சேமிப்பதற்கு முடிவுகட்டியுள்ள அந்நிறுவனம், கூகுள் ஒன் என்ற மாத சந்தாவை அறிமுகப்படுத்தியுள்ளது.கூகுள் புகைப்படங்களுக்கான மாற்று வழிகளைத் தேடுகிறீர்களானால், ஸ்டோரேஜ் பற்றி கவலைப்படாமல் உங்கள் புகைப்படங்களை தொந்தரவில்லாமல் சேமிக்க சில வழிகள் உள்ளது.

இன்று முதல் கூகுள் போட்டோஸ்களின் இலவச ஸ்டோரேஜ் ஆப்சன் இனி கிடைக்காது. பழைய நினைவுகளை இழக்க விரும்பாதவர்களிடையே பயம் அதிகரித்து வருகிறது. இப்போது, உங்களில் பலர் கூகுள் புகைப்படங்களுக்கான மாற்று வழிகளைத் தேடுகிறீர்களானால், ஸ்டோரேஜ் பற்றி கவலைப்படாமல் உங்கள் புகைப்படங்களை தொந்தரவில்லாமல் சேமிக்க சில வழிகள் உள்ளது. எனவே, உங்கள் புகைப்படங்களுக்கு ஏற்ற கிளவுட் ஸ்டோரேஜ் திட்டத்தை வழங்கும் ஏதேனும் சேவை அல்லது பயன்பாடு இருக்கிறதா? அல்லது கூகிளுக்கு பணம் செலுத்தத் தொடங்குவது சிறந்ததா? என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கான கிளவுட் ஸ்டோரேஜ் சேவையை விட கூகுள் போடோஸின் பயன்பாடு மிக பயனுள்ளதாக இருந்தது. இதில் யூசர்கள் படங்களை எளிதாக தேடவும், ஸ்லைடு காட்சிகள், வீடியோக்கள், புகைப்படங்களைத் திருத்தவும், இலவச நினைவகம் மற்றும் பலவற்றை தானாக உருவாக்கவும் அனுமதிக்கும் பல அம்சங்களையும் கூகுள் வழங்குகிறது. 

அனைத்து செயல்படுகளையும் பார்க்கும் போது, கூகுள் போடோஸ்களுக்கு நேரடி மாற்று எதுவும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இருப்பினும், கூகுள் போட்டோஸ் வழங்கும் அனைத்து அம்சங்களையும் யூசர்கள் கவனிக்கவில்லை என்றால், அவர்கள் ஆன்லைனில் தங்கள் ஊடகத்தை காப்புப் பிரதி எடுக்க அனுமதிக்கும் மற்ற எந்த ஒரு கிளவுட் சேமிப்பக சேவையையும் தேர்வு செய்யலாம். 

அந்த வகையில் மிக முன்னனி 4 கிளவுட் சேவைகளை தற்போது பார்போம் 1)மைக்ரோசாஃப்ட் ஒன்ட்ரைவ் 2)அமேசான் போட்டோஸ் 3)ஆப்பிள் போட்டோஸ் 4) டிராப்பாக்ஸ்