மற்றவை

சமையல் எண்ணெய் இறக்குமதிக்கு சுங்கவரி முழுவதுமாக ரத்து.!!

Malaimurasu Seithigal TV

இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய்க்கான சுங்கவரியை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்துள்ளது.

இதனால் ஓரிரு நாட்களில் சமையல் எண்ணெயின் விலை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச அளவில் அதிகரித்துள்ள  தேவை மற்றும் உள்நாட்டில் உற்பத்தி குறைந்தது உள்ளிட்ட காரணங்களால், இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை நிகழாண்டு 46 சதவீதம் வரை அதிகரித்தது.

இதனையடுத்து விலையேற்றத்தை தடுக்கும் வகையில் மத்திய அரசு, அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிவரை, சமையல் எண்ணெய்யை இருப்பு வைப்பதற்கு கட்டுப்பாட்டை நிர்ணயித்தது. மேலும் இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய்க்கான சுங்கவரியைக் ரத்து செய்துள்ளது.