மற்றவை

இமாச்சலப்பிரதேசம் : கடும் வெள்ளப் பெருக்கு...போக்குவரத்திற்கு கட்டுப்பாடு!

Tamil Selvi Selvakumar

இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பீஸ் நதியில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

இந்நிலையில் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.  அதன்படி, பீஸ் நதியில் வெள்ளம் ஆர்ப்பரித்துச் செல்வதால் அந்த ஆற்றின் வழியாக செல்லும் மண்டி குலு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்திற்கு  கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் சிம்லா கல்கா பாரம்பரிய ரயில்பாதையில் மரங்கள் விழுந்துள்ளதால் ரயில்கள் தடை செய்யப்பட்டுள்ளன.