மற்றவை

மாடல் அழகிக்கு அதிக முடி வெட்டிய சலூன் கடைக்காரருக்கு கோடி கணக்கில் அபராதம்....

மாடல் அழகிக்கு அதிக முடி வெட்டிய சலூன் கடைக்காரருக்கு , தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் ரூ. 2 கோடி அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது

Malaimurasu Seithigal TV

டெல்லியை சேர்ந்த இளம்பெண்ணான தாரா சரண் என்பவர் மாடலிங் அழகியாக உள்ளார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் சலூன் கடைக்கு சென்றுள்ளார். அங்கு இருந்த ஊளியரிடம் தனக்கு முடித்திருத்தம் செய்ய கூறிய அவர், தான் மாடலிங் துறையில் இருப்பதால் கொஞ்சம் கவனமாக முடித்திருத்தம் செய்யுங்கள் என்றும் அதிகமான அளவு முடியை வெட்டி விடாதீர்கள் என கூறியுள்ளார்.

ஊழியரும் அவர் கூறியதற்கு சரி என கூறி முடி திருத்தம் செய்ய தொடங்கினார் ஊழியர், மாடலிங் அழகியான தாராவும் கண்களை மூடி பாடல் கேட்டுக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. குறிப்பிட்ட இடைவெளியில் கண்களை திறந்து பார்த்தபோது முடி அதிகமாக வெட்டப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்த தாரா, தான் கூறியதைவிட ஏன் அதிகமான அளவு முடியைக் குறைத்தீர்கள் என்று கடை ஊழியரிடம் கேட்டுள்ளார்.

அதற்கு அந்த ஊழியர் சரியான பதில் கூறாத நிலையில், அங்கிருந்து கோபமாக கிளம்பி வீட்டிற்கு வந்துள்ளார் மாடலிங் அழகி தாரா, பின்னர் அடுத்தடுத்த நாட்களில் அவரது மாடலிங் வாய்ப்புகள் முடி குறைந்துள்ள காரணத்தால் வெகுவாக குறைந்துள்ளது. இதுதொடர்பாக நுகர்வோர் ஆணையத்திடம் முறையிட்டார் தாரா சரண். வழக்கை விசாரித்த ஆணையம் தவறு செய்த சலூன் கடைக்கு 2 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.