காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, இந்திய அரசு எடுத்த நடவடிக்கைகளை திரும்ப பெறச் செய்யுமாறு, சமீபத்தில் ஐ.நா.வுக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், காஷ்மீர் டி.ஜி.பி. தில்பக் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்பட முக்கிய அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திடீரென ஆலோசனை நடத்தினார்.
தலைநகர் டெல்லியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முன்னதாக அமித்ஷாவை சந்தித்து, ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்ஹா ஆலோசனையில் ஈடுபட்டார். 2019-ம் ஆண்டு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதற்கு முன்னரும், இதுபோன்று உயர் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை செய்தார் என்பது குறிப்பிடதக்கது.