மற்றவை

சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தமாட்டேன் - கேரள முதலமைச்சர் திட்டவட்டம்!

கேரளாவில் சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தமாட்டேன் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Tamil Selvi Selvakumar

பினராயி விஜயன் தொடர்ந்து 2வது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைகிறது. இதுதொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் நேற்று உரையாற்றிய அவர்,  சமீபகாலமாக இந்திய  அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மதச்சார்பின்மையை சீர்குலைக்கும் முயற்சிகள் நடைபெறுவதாக குற்றஞ்சாட்டினார்.

மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்க சிலர் முயற்சித்து வருவதாக சாடிய அவர், அதற்கான கணக்கெடுப்பும் நடைபெற்று வருவதாக விமர்சித்தார். ஆனால்  மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்கக்கூடாது என்பதில் தனது அரசு தெளிவாக இருப்பதாகவும் பினராயி விஜயசன் தெரிவித்தார்.