மற்றவை

இந்திய கோதுமைக்கு சர்வதேச அளவில் கிராக்கி....இதுவரை 1.8 மில்லியன் கோதுமை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி..!

Tamil Selvi Selvakumar

உக்ரைனின் தானியங்களை நம்பி கொண்டிருந்த பல உலக நாடுகள், அங்கு நடக்கும் போரின் எதிரொலியால் உணவு பற்றாக்குறையால் அவதிப்படுகின்றனர். இதனால் பல்வேறு நாடுகளுக்கு இந்தியா இதுவரை ஒன்று புள்ளி 8 மில்லியன் டன் கோதுமையை அனுப்பி வைத்துள்ளது. 

இந்திய கோதுமைக்கு சர்வதேச அளவில் கிராக்கி:

இந்திய கோதுமைக்கு சர்வதேச அளவில் கிராக்கி ஏற்பட்டுள்ளது. உக்ரைனின் தானியங்களை நம்பியிருந்த உலக நாடுகள், அங்கு நிலவும் போர் சூழல் காரணமாக தங்கள் கவனத்தை வேறு நாடுகள் பக்கம் திசை திருப்பியுள்ளன. இதனிடையே உலக நாடுகளுக்கு உதவ இந்தியா முன்வந்தது. ஆனால் சமீபத்தில் கோதுமை உற்பத்தி குறைந்தததால் தனியார் கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்தது. இருப்பினும் உலக நாடுகளின் கோரிக்கையை ஏற்று, மீண்டும் கோதுமை ஏற்றுமதியை இந்தியா  தொடங்கியுள்ளது. அதன்படி 12க்கு மேற்பட்ட நாடுகள் இந்தியாவிடம் இருந்து கோதுமையை வாங்கி பயன்படுத்தி வருகின்றன. 

உலக நாடுகளுக்கு 1 புள்ளி 8 மில்லியன் டன் கோதுமையை இதுவரை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது:

இந்த நிலையில் கடந்த மே 13ம் தேதி முதல் இதுவரை வங்கதேசம், ஓமன், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட உலக நாடுகளுக்கு 1 புள்ளி 8 மில்லியன் டன் கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய உணவு பாதுகாப்பு துறை அதிகாரி  சுதான்ஷு பாண்டே தெரிவித்துள்ளார்.