மற்றவை

வாழை பழத்தை அழிக்காமல் உரிக்கும் ரோபோ அறிமுகம் !

Tamil Selvi Selvakumar

ஜப்பானில் உள்ள ரோபோ ஆராய்ச்சியாளர்கள் வாழை பழத்தை  நசுக்காமல் அதன் தோலை உரிக்கும் இரண்டு வகை ரோபோக்களை அறிமுகம் செய்துள்ளனர்.

டோக்கியோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்ட இந்த ரோபோவின் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவில் வாழைப்பழத்தை எடுத்து அதன் தோலை சுமார் மூன்று நிமிடங்களில் ரோபோ திறமையாக தனது இரண்டு கைகளையும் பயன்படுத்தி  அதன் தோலை உரித்து  காட்டியது.

பழத்தை அழிக்காமல் தோலை மட்டும்  உரிக்க ரோபோவுக்கு பயிற்சி அளிக்க 13 மணி நேரத்திற்கும் மேலாக எடுத்ததாக விஞ்ஞானி குனியோஷி கூறினார். ஆலைகளில் தொழிலாளர் பற்றாக்குறைக்கு இந்த ரோபோ பயன்படும் என தெரிவித்துள்ளனர்.