மற்றவை

நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு!! பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் பதவி தப்புமா ?

இந்திய மக்கள் சுயமரியாதை மிக்கவர்கள் என்றும் உலகின் எந்த வல்லரசு நாடும் இந்தியாவை கைப்பாவையாக நடத்த முடியாது எனவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். 

Tamil Selvi Selvakumar

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடத்த அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் அந்நாட்டு மக்களிடையே நேரலையில் பேசிய பிரதமர் இம்ரான்கான், அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக தன்னை வெளியேற்றுவதற்கான வேலை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். ஐனநாயகத்தை காக்க ஞாயிறன்று நாடு தழுவிய போராட்டத்துக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதாக குற்றம்சாட்டிய அவர், உலகின் எந்தவொரு வல்லரசு நாடும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் தலையிட முடியாது எனவும் தெரிவித்தார்.

இதனிடையே இம்ரான்கான் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் அந்நாட்டு நேரப்படி காலை பத்து முப்பது மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது. வாக்கெடுப்பில் இம்ரான்கான் தோல்வியடையும் பட்சத்தில் எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்து புதிய அரசை அமைக்கும் பணிகளில் ஈடுபடுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.