புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தராஜன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலர் , , கல்வித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நவம்பர் முதல் வாரத்தில் ஒன்று முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.