மற்றவை

"மேகதாது அணை; சட்ட நடவடிக்கைகள் தயார்" டி.கே.சிவகுமார் பேட்டி!

Malaimurasu Seithigal TV

மேகதாது அணை கட்ட வேண்டிய அனுமதியை பெற அனைத்து சட்ட நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளன டி கே சிவகுமார் பேட்டியளித்துள்ளார். 

பெங்களூரு நகரில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த கர்நாடக துணை முதல்வர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் டி கே சிவகுமார் மேகதாது அணை கட்ட வேண்டிய அனுமதியை பெற கர்நாடக அரசு அனைத்து சட்ட நடவடிக்கைகளை தயார் நிலையில் ஏற்பாடுகளை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் காவிரியில் 3000 கன அடி நீர் திறந்து விட முடியாது எனக் கூறிய அவர், மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அணை கட்ட உரிய சட்ட போராட்டம் நடத்தி கர்நாடக அரசு விரைவில் அனுமதியை பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.