மற்றவை

தலித் தலைவர் மென்று தின்ற இனிப்பை வாங்கி சாப்பிட்ட எம்.எல்.ஏ..!

Tamil Selvi Selvakumar

கர்நாடகாவில் சகோதரத்துவத்தை ஊக்குவிக்கும் விதமாக எம்.எல்.ஏ ஒருவர் செய்த காரியம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பெங்களூரு  எம்.எல்ஏ சமீர் அகமது கான் என்பவர், நேற்று அங்கு  நடைபெற்ற அம்பேத்கர் ஜெயந்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், மர்ம நபர்கள் சிலர் சமூகத்தினர் இடையே பிரிவினைவாதத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டினார்.  தொடர்ந்து அருகிலிருந்த தலித் தலைவர் சாப்பிட்ட இனிப்பை வாங்கி சாப்பிட்டுள்ளார். இதனை கண்டு ஆச்சரியமடைந்த அங்கிருந்த  பொதுமக்கள் எம்.எல்.ஏவின் செயலை கைதட்டி வரவேற்றுள்ளனர்.