மற்றவை

என் நண்பன் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது கிடைத்தது மட்டற்ற மகிழ்ச்சி...ரஜினியின் நண்பர் ராஜ்பகதூர்

திரை உலகின் உச்ச விருதான தாதா சாகேப் பால்கே விருது தனது நண்பன் ரஜினிக்கு கிடைத்தது மட்டற்ற மகிழ்ச்சி என அவரது நண்பர் ராஜ்பகதூர் தெரிவித்துள்ளார்.

Malaimurasu Seithigal TV

திரை உலகின் உச்ச விருதான தாதா சாகேப் பால்கே விருது தனது நண்பன் ரஜினிக்கு கிடைத்தது மட்டற்ற மகிழ்ச்சி என அவரது நண்பர் ராஜ்பகதூர் தெரிவித்துள்ளார். நிச்சயம் ரஜினி காந்துக்கு இந்த விருது கிடைக்கும் என தான் முன்பே எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் ஒவ்வொரு படத்தின் திரைக்கதை குறித்து தன்னிடம் விவாதிப்பார், அதில் சில குறைகளை சொல்லும் போது அதை திருத்திக் கொள்வார். அதேபோல் அண்ணாத்த திரைப்படம் குறித்து என்னிடம் விவாதித்தார்.

அதில் ஒரு மாற்றம் கூட நான் தெரிவிக்கவில்லை அந்த அளவிற்கு சிறப்பான திரைப்படம் அண்ணாத்த.  தீபாவளிக்கு அண்ணாத்த திரைப்படம் வெளியாவதில் மகிழ்ச்சி நிச்சயம் இந்த படம் பிரம்மாண்ட வெற்றி பெறும் அண்ணன், தங்கை பாசத்தை இந்தப்படத்தில் அழகாக காண்பித்துள்ளனர் என தெரிவித்தார்.