மற்றவை

கேரளாவிற்கு ஆரஞ்சு அலர்ட்..இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Malaimurasu Seithigal TV

கேரளாவில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, அண்மையில் கேரளாவில் கனமழை கொட்டித்தீர்த்தது.

இதனால் நீர்நிலைகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டு, எங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. தற்போது அம்மாநிலத்தில் இயல்பு நிலை திரும்பி வருகிறது.

இந்தநிலையில், நாளை முதல் வருகிற 25-ம் தேதி வரை கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கையை இந்தியா வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

இதுபோல் தமிழகம் மற்றும் புதுவை, மாஹி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.