மற்றவை

'மாநில அந்தஸ்து' தீர்மானம்...புதுச்சேரி சட்டப்பேரவையில் 14-வது முறையாக நிறைவேற்றம்!

Tamil Selvi Selvakumar

மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி புதுச்சேரி சட்டப்பேரவையில் 14-வது முறையாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

புதுச்சேரி சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 9ந் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்நிலையில் பேரவை கூட்டத்தின் இறுதி நாளான இன்று புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்த்தை மத்திய அரசு வழங்க வலியுறுத்தி சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா உள்ளிட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் நேரு ஆகியோர் கொண்டு வந்த தனிநபர்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 

தொடர்ந்து, இந்த தீர்மானத்திற்கு முழு ஆதரவளிப்பதாக பாஜக கருத்து தெரிவித்ததையடுத்து, அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும், சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்களும் தீர்மானத்திற்கு ஆதரவளித்தனர். பின்னர் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, இந்த ஆண்டுக்குள் மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.