மற்றவை

புனித் ராஜ்குமார் மறைவுக்கு பிறகு இதய பரிசோதனைக்காக மருத்துவமனையை நாடும் மக்கள்

Malaimurasu Seithigal TV

கன்னட மெகா ஸ்டார் புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு பிறகு இதய பரிசோதனைக்காக மருத்துவமனையில் ஏராளமானோர் குவிந்து வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கன்னட மெகா ஸ்டார் புனித் ராஜ்குமார் தனது 46-வது வயதில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

அவரது மறைவு தென்னிந்திய திரை பிரபலங்கள் மட்டுமின்றி, ரசிகர்கள், சாமானியர்கள் என அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகிய நிலையில் பெங்களூரில் உள்ள புகழ் பெற்ற இதய நோய் மருத்துவமனையில் சராசரியாக நாள் ஒன்றுக்கு ஆயிரம் நோயாளிகளுக்கு பரிசோதனை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது அதன் எண்ணிக்கை 1800 ஆக அதிகரித்துள்ளது.

இதனால் மருத்துவமனையில்  கூட்டம் அலைமோதுகிறது. புனித் ராஜ்குமாரின் மறைவு சாமானிய மக்களையே ஒரு வித பயம் கலந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி இருப்பது தெரிகிறது.