மற்றவை

சாலை விபத்துகளில் சிக்கிய நபர்கள்... பாதிப்பின்றி உயிர்தப்பிய அதிசயம்...

குஜராத்தில் இரு வேறு சாலை விபத்துகளில் சிக்கிய நபர்கள், காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். 

Malaimurasu Seithigal TV

குஜராத்தின் தாகூத் பகுதியில் அண்மையில், இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர் வேகமாக சென்ற பேருந்தை வளைவில் முந்த முயன்றதாக தெரிகிறது. இதில் எதிர்பாராத விதமாக அவர் பேருந்து சக்கரத்தில் விழவே, சுதாரித்துக்கொண்ட பேருந்து ஓட்டுனர், உடனடியாக வாகனத்தை நிறுத்தியுள்ளார். இதனால் அந்த இளைஞர் உயிருடன் பேருந்துக்கு அடியிலிருந்து எழுந்து வந்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதேபோல் மழைநீர் தேங்கியிருந்த சேதமடைந்த தாகூத் சாலையில், மனைவி, குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் நிலைத்தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் எதிரே வந்த டிராக்டர் அவர் தலை மீது ஏறி இறங்கியுள்ளது.   அந்த நபர் தலைக்கவசம் அணிந்திருந்ததால், உயிரிழப்பு தவிர்க்கப்பட்டதாக அங்கிருந்தோர் தெரிவிக்கின்றனர்.