மற்றவை

அஜித்பவாருக்கு வாகனம் ஓட்டும் பெண் போலீஸ்... குவியும் மந்திரிகளின் பாராட்டுக்கள்...

மந்திரி அஜித் பவார் பயணித்த வாகனத்தை இயக்கிய பெண் போலீஸை அனைவரும் பாரட்டி வந்த வண்ணம் உள்ளனர்

Malaimurasu Seithigal TV

பெண் போலீசாக திருப்தி முலிக் என்பவர் பணியாற்றி வருகிறார்.அவர் போலீஸ் துறையின் மோட்டார் வாகன பிரிவில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக போலீசாக பணியாற்றிய இவர், கடந்த 23-ந் தேதி வி.ஐ.பி. பாதுகாப்பு வாகன ஓட்டுனர் பயிற்சியை முடித்துள்ளார். இந்த நிலையில் துணை முதல் மந்திரி அஜித் பவார் சமீபத்தில் சித்துதுர்க் பகுதியில் தனது பயணத்தை மேற்கொண்டார்.

அப்போது துணை முதல் மந்திரி அஜித் பவார், சிந்துதுர்க் மாவட்ட பொறுப்பு மந்திரி உதய் சமந்த் மற்றும் மந்திரி சதேஷ் பாட்டீல் ஆகியோர் பயணித்த வாகனத்தை ஓட்டும் பணி திருப்தி முலிக்கிற்கு வழங்கப்பட்டது. அப்போது அவரின் வாகனம் ஓட்டும் திறமை மந்திரிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்த நிலையில் மந்திரி சதேஜ் பாட்டீல் தனது ட்விட்டர் பக்கத்தில், 3 மந்திரிகளுடன் திருப்தி முலிக் கார் ஓட்டும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.மேலும், “சிறுவயதில் இருந்தே வாகனம் ஓட்டுவதை விருப்பமாக கொண்ட திருப்தி முலிக் போலீஸ் துறையின் மோட்டார் வாகன பிரிவில் தற்போது பணி புரிந்து வருகிறார். அவர் வாகனம் ஓட்டும் திறமை இளம் பெண்களுக்கு ஒரு உத்வேகமாக அமைந்துள்ளது” எனவும்  கூறியுள்ளார்.