மற்றவை

காங்கிரஸுக்கு தேர்தல் வியூகம் அமைத்த பிரசாந்த் கிஷோர் - அறிக்கை சமர்ப்பிக்க கட்சி தலைமை உத்தரவு!

Tamil Selvi Selvakumar

மக்களவை தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூகம் சார்ந்த பரிந்துரைகளை தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் வழங்கிய நிலையில், அதனை பரிசீலித்து 72 மணி நேரத்தில் அறிக்கை சமர்பிக்க காங்கிரஸ் உயர்மட்ட குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

2024 மக்களவை தேர்தலில் மீண்டும் பலத்தை நிரூபிக்க தீவிரம் காட்டி வரும் காங்கிரஸ் கட்சி, கடந்த சில நாட்களாக தொடர்ந்து தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோருடன் ஆலோசனை நடத்தி வருகிறது. மேலும் அவர் தேர்தல் சார்ந்த வியூகங்களை வழங்கி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட கட்சி மூத்த தலைவர்களுடன் ஆலோசித்ததாக தெரிகிறது.

இந்தநிலையில் பிரசாந்த் கிஷோர் பங்கேற்ற கூட்டத்தில் பல்வேறு தேர்தல் யுத்திகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், மேலும் அவரது பரிந்துரையை பரிசீலித்து 2 அல்லது 3 நாட்களில் அறிக்கை சமர்பிக்கவும் காங்கிரஸ் உயர்மட்ட குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கட்சி செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.