மற்றவை

சண்டைக்காக சுளுக்கி ஆயுதங்கள் தயாரிப்பு... மீனவர்களை கைது செய்த போலீசார்...

புதுச்சேரியில் மோதலுக்கு பயன்படுத்த 270 சுளுக்கி ஆயுதங்களை தயாரித்த பட்டறை உரிமையாளர் உட்பட மூன்று மீனவர்களை போலிசார் கைது செய்தனர்.

Malaimurasu Seithigal TV

புதுச்சேரியில் சுருக்கு மடி வலை பயன்படுத்துவது தொடர்பாக 3 மீனவ கிராமங்களுக்கு இடையே கடந்த சனிகிழமை அன்று மோதல் ஏற்பட்டதை அடுத்து மீனவ கிராமங்களில் 144 தடை அமல்படுத்தப்பட்டு போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர், 

இந்நிலையில் முதலியார்பேட்டை சிவா விஷ்ணு நகரில் இயங்கி வரும் பட்டரை ஒன்றில் சுளுக்கிகள் தயாரிப்பதாக முதலியார்பேட்டை போலிசார்க்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது,  தகவலின் பேரில் பட்டரைக்கு சென்று சோதனை செய்த போலீசார் அங்கு தயாரித்து வைக்கப்பட்டிருந்த 270 சுளுக்கி ஆயுதங்களை பறிமுதல் செய்து அங்கு  அதனை தயாரித்து கொடுத்த பட்டரையின் உரிமையாளர் திருநாவுக்கரசு மற்றும் வீராம்பட்டினத்தை சேர்ந்த மீனவர்களான குமார், பிரகாஷ், முத்துவேல் ஆகியோரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்திய போது மீண்டும் இரு மீனவ கிராமங்களுக்கு இடையே மோதல் நடந்தால் எதிர் தரப்பினரை தாக்கவே இந்த சுளுக்கிகளை செய்ததாக தெரிவித்துள்ளனர், 

தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்கள் மீது ஆயுதம் வைத்திருந்தல் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இவ்வழக்கில் இனியன் உட்பட சிலரை போலிசார் தேடி வருகின்றனர்.