மற்றவை

உத்தரகண்ட் மாநிலத்தில் பிரதமர் மோடி சுற்றுப் பயணம்...!

Malaimurasu Seithigal TV

உத்தரகாண்ட் மாநிலத்திற்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, பிதோரகரில் உள்ள பார்வதி தேவி கோயிலில் வழிபாடு செய்தார்.

உத்தரகாண்ட் மாநிலம் பிதோரகர் பகுதியில் நான்காயிரத்து  200 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைப்பதற்காக சென்றுள்ளார். திட்டப் பணிகளை தொடங்கி வைப்பதற்கு முன்னதாக, அங்குள்ள பிரசித்தி பெற்ற பார்வதி கோயிலுக்கு சென்று பூஜைகள் செய்தும் உடுக்கை அடித்தும் சுவாமி தரிசனம் செய்தார்.

இதனைத் தொடர்ந்து, ஜகேஷ்வர் கோயிலிலும், ஆதி கைலாஷ்  ஜோலிங்காங் என்ற இடத்தில் உள்ள சிவன் கோயிலிலும் வழிபாடு செய்கிறார். பின்னர், கஞ்ச் கிராமத்திற்கு சென்று உள்ளூர் மக்கள், ராணுவ வீரர்கள், இந்தோ திபெத் எல்லைப் படையினர் மற்றும் எல்லைச் சாலைகள் அமைப்பினருடன் கலந்துரையாடுகிறார்.

தொடர்ந்து, பிதோரகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்கவும், மாவோன் பகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் உரையாற்றவுள்ளார்.