மற்றவை

கொரோனா நிலவரம், தடுப்பூசி விநியோகம் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை

நாட்டின் தற்போதைய கொரோனா நிலவரம், தடுப்பூசி விநியோகம் குறித்து பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.  

Malaimurasu Seithigal TV

செப்டம்பர் இறுதி மற்றும் அக்டோபர் மாதங்களில் கொரோனா மூன்றாம் அலை தாக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ள சூழலில், பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை நடைபெற்றுள்ளது. நாடு முழுவதும் 72 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் போடப்பட்ட நிலையில், தடுப்பூசி திட்டத்தை விரைவுப்படுத்துவது தொடர்பாகவும், கொரோனா பாதிப்பின் தற்போதைய நிலவரம் குறித்தும் உயர்மட்ட  அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்தும் ஆலோசனையில் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் கொரோனா மூன்றாவது அலை ஏற்படலாம் என்று பரவலாக பேசப்படும் நிலையில், பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.