நாடு முழுவதும் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்துவரும் நிலையில், ஊரடங்கு காலத்தில் மத்திய அரசின் நிதியுதவி திட்டங்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களின் படிப்பு உள்ளிட்ட சில அறிவிப்புகளை பிரதமர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தடுப்பூசி தொடர்பான முக்கிய அறிவிப்புகளும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே மாநில முதலமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் தடுப்பூசிகள் குறித்து பல்வேறு கட்டங்களாக பிரதமர் ஆலோசனை நடத்தியிருந்த நிலையில், இன்று மக்களுக்கு ஆற்றும் உரை முக்கியமானதாக கருதப்படுகிறது.