மற்றவை

சிறைக் கைதி நெஞ்சு வலியால் உயிரிழப்பு...!

Malaimurasu Seithigal TV

புழல் சிறையில், கைதி நெஞ்சு வலியால் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நில அபகரிப்பு தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த ராஜேஷ் என்பவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 50 வயதான ராஜேஷ் திடீரென நெஞ்சு வலியால் துடித்த நிலையில், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ராஜேஷ் செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். 

முன்னதாக, உயிரிழந்த ராஜேஷ் கடந்த 18ஆம் தேதி நடந்த குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொண்டு, சிறை கண்காணிப்பாளரிடம் தன்னை  மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறிய நிலையில், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.