மற்றவை

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு மத்திய அரசே காரணம்..ராகுல் காந்தி கண்டனம்

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு மத்திய அரசே காரணம் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார்.

Malaimurasu Seithigal TV

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு மத்திய அரசே காரணம் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார்.

பண்டிகை காலம் நெருங்கியுள்ள நிலையில், எரிபொருள், சமையல் எண்ணெய் ஆகியவற்றின் விலை வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளது.

இதுதவிர அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடந்த ஒரு சில வாரங்களாக ஏற்றம் கண்டுள்ளது. இந்தநிலையில் இந்த திடீர் விலைவாசி உயர்வுக்கு மத்திய மோடி அரசை கடுமையாக சாடியுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, விலை உயர்வு கேளிக்கூத்துக்கு உரிய விஷயமல்ல என டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

சாமான்ய மக்களின் நிலைமையை புரிந்து கொண்டு மோடி அரசு செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.