மற்றவை

கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம்..? உலக சுகாதார அமைப்பின் தகவல்...

கோவாக்சின் தடுப்பூசிக்கு அடுத்த மாதம் 5 ஆம் தேதிக்கு பிறகு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் அளிக்க கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

Malaimurasu Seithigal TV

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவேக்சின் தடுப்பூசிக்கு இந்தியாவில் அவசர கால பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. அண்மையில், கோவேக்சின் தடுப்பூசி நிறுவனம் மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவுகளையும், செயல் திறன் பற்றிய தரவுகளையும் வெளியிட்டது.

இந்த நிலையில் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அடுத்த மாதம் 5 ஆம் தேதிக்கு பிறகு அவசர கால பயன்பாட்டுக்கான அங்கீகார வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அக்டோபர் 5 ஆம் தேதி கூட உள்ள உலக சுகாதார அமைப்பின் நோய்த் தடுப்புக்கான பகுப்பாய்வு ஆலோசனை குழு கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிப்பதற்கான ஆலோசனையை மேற்கொள்ள உள்ளது குறிப்பிடதக்கது.