சித்தூர் மாவட்டம் சந்திரகிரி பகுதியில் உள்ள நீவா நதி கரையோரம் ராஜசேகர் என்பவர் தனது மனைவி மற்றும் ஒரு வயது கை குழந்தையுடன் குடிசை கட்டி வசித்து வருகிறார். தொடர் கனமழை காரணமாக அங்குள்ள ஏரி, குளம் ஆகியவை நிரம்பி வழிந்து வருகிறது.
அதனைதொடர்ந்து நீவா நதியிலும் அதீத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் கரையோரம் உள்ள ராஜசேகர் குடிசையையும் வெள்ளம் சூழ்ந்து கொண்டது . இந்த வெள்ளத்தில் ராஜசேகர் குடும்பமும் சிக்கி கொண்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவலறிந்து போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கயிறு கட்டி அவர்கள் இருந்த கரையில் இருந்து மறுகரைக்கு மூவரையும் பத்திரமாக மீட்டு கொண்டு வந்தனர். மேலும் ராஜசேகர் வளர்ந்து வந்த நாயையும் போலீசார் பத்திரமாக மீட்டனர். போலீசாரின் இச்செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.