மற்றவை

பிளவுபட்ட தேசம் உலகை ஒருபோதும் ஆள முடியாது - சல்மான் குர்ஷித் கருத்து!

பிளவுபட்ட தேசம் உலகை ஒருபோதும் ஆள முடியாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் கவலை தெரிவித்துள்ளார்.

Tamil Selvi Selvakumar

மத்திய பிரதேச மாநிலத்தின் கார்கோன் பகுதியில் ராம நவமி கொண்டாட்டங்களின்போது வன்முறை வெடித்தது. அப்போது வீடுகளை சேதப்படுத்திய சம்பவம் நடைபெற்றது.

இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள, காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சல்மான் குர்ஷித், அரசு சட்டத்தை மீறி வீடுகளை இடிக்கும் முடிவை தேர்ந்தெடுக்கும்போது தேசபக்தியில் எஞ்சியிருக்கும் மரியாதை என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் சுய விளம்பரத்திற்காக இஸ்லாமியர்களை தாக்கும் அரசுகள், நமது குடியரசின் மூலக்கல்லான இந்து-இஸ்லாம் ஒற்றுமை, சமூக நல்லிணக்கப் பிணைப்புகள் என்ற உன்னத கனவை தாக்குகின்றனர் என்பதை உணர வேண்டும் எனவும் பதிவிட்டுள்ளார்.