மற்றவை

கோர்ட் குண்டு வெடிப்பு சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்... போதைக் கும்பலுடன் தொடர்பு வைத்த காவலர் காரணமா..?

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கீழமை கோர்ட்டில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். 

Malaimurasu Seithigal TV

லூதியானாவில் உள்ள கீழமை கோர்ட் வளாகத்தில் கடந்த வியாழக்கிழமை குண்டு வெடித்தது. இந்த விபத்தில்  ஒருவர் உயிரிழந்த நிலையில் பலபேர் பேர் காயமடைந்தனர். இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பஞ்சாப் காவல் துறையில் பணியாற்றிய கனங்தீப் சிங் என்ற முன்னாள் காவலருக்கு தொடர்பு இருக்கும் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

லூதியானாவின் ஹனா பகுதியை சேர்ந்த கனங்தீப் சிங் மாநில போலீஸ் துறையில் தலைமை காவலராக பணியாற்றியது தெரியவந்தது. போதைப்பொருள் கடத்தல் வழக்கிலும், போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் கனங்தீப் சிங்கிற்கு தொடர்பு இருந்ததையடுத்து அவர் 2019 -ஆம் ஆண்டு தலைமை காவலர் பணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். எனவே பணியில் இருந்து நீக்கப்பட்டதற்கு பழிதீர்க்கும் வகையில் இந்த குண்டுவெடிப்பு தாக்குதலை கனங்தீப் சிங் நடத்தி இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.