மற்றவை

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிடம் 6.93 கோடி டோஸ் தடுப்பூசி கையிருப்பு

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வசம், 6 கோடியே 93 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Malaimurasu Seithigal TV

கொரோனா பரவலை கட்டுப்படுத்த, நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் நடைமுறை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கென தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடம் இருந்து 75 சதவீத தடுப்பூசிகளை மத்திய அரசு நேரடியாக கொள்முதல் செய்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.

அந்தவகையில் மத்திய அரசின் தொகுப்பிலிருந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு  92 கோடியே 57லட்சத்து 51 ஆயிரத்து 325 டோஸ்கள்   வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் பயன்படுத்தப்பட்டது போக,  தற்போது மாநிலங்கள் வசம் 6 கோடியே 93 லட்சத்து 46 ஆயிரத்து 80 கோடி டோஸ் தடுப்பூசிகள் இருப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.