மற்றவை

பாலியல் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை இன்றி ரேஷன் பொருள் வழங்குக - உச்ச நீதிமன்றம் உத்தரவு

பாலியல் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை இல்லாமல் ரேஷன் பொருட்களை தொடர்ந்து வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Malaimurasu Seithigal TV

பாலியல் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை இல்லாமல் ரேஷன் பொருட்களை தொடர்ந்து வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கின்போது பாலியல் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக தர்பார் மகிளா ஒருங்கிணைப்புக் குழு என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த வழக்கு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், பாலியல் தொழிலாளர்களுக்கு குடியிருப்பு ஆவணங்களின்றி ஆதார் எண் வழங்க வேண்டும் என ஆதார் ஆணையத்துக்கு உத்தரவிட்டதோடு, ரேஷன் பொருட்களையும் அடையாள அட்டை இல்லாமல் தொடர்ந்து வழங்க வேண்டும் என மாநிலங்களுக்கு உத்தரவிட்டனர்.