மற்றவை

12 ஆம் வகுப்பு மாணவனுடன் ஓட்டம்பிடித்த ஆசிரியை... ஆன்லைன் க்ளாஸ் எடுக்கும் போது கனெக்ஷன்!!

Malaimurasu Seithigal TV

கொரோனா ஊரடங்கால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆசிரியர்களை தெய்வமாக கருதப்பட வேண்டும். ஆனால் பலரும் எதிர்பார்க்க முடியாத விதமாக ஒரு சில ஆசிரியர்கள் செய்யும் தவறினால் சமூகத்தில் மற்ற ஆசிரியைக்கும் களங்கம் உருவாகுகிறது.

தற்போது ஊரடங்களால் பள்ளிக்கு விடுமுறைகள் அளிக்கப்பட்டிருந்த நிலையில், ஹாரியான மாநிலம் பானிபட் நகரில்  பிளஸ்டூ படிக்கும் 17 வயதான மாணவனுக்கு  கடந்த 2 மற்றும் 3 மாதங்களாக  ஆன்லைன் வகுப்புகளை எடுத்து வந்துள்ளார் கணவரை பிரிந்து வாழும் ஆசிரியை ஒருவர். 

இந்தநிலையில் திடிரென்று இருவரும் மாயமாகியுள்ளனர். மாணவனுடன்  ஆசிரியை மாயமாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மாணவனும் ஆசிரியையும் ஒரே நேரத்தில் காணாமல் போனதால் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் தேஸ்ராஜ் காலனியில் அமைந்துள்ள அந்த ஆசிரியை வீட்டில் தனது மகனுக்கு  4 மணிநேரம் பாடம் தொடர்பாக பயிற்சி அளித்து வந்ததாகவும் 17 வயது மாணவரின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.


கணவரை பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வந்துள்ளார் அந்த ஆசிரியை. இந்த நிலையில் மாணவரின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஆசிரியை மீது கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் விசாரணையில், இருவரும் வீட்டிலிருந்து பணம், நகைகள் என எதுவும் எடுத்துசெல்லவில்லை மேலும் அவர்கள் மொபைல் ஆஃப் செய்யப்பட்டுள்ளாத தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணையை தீவிர படுத்தியுள்ளனர்