உலகம் முழுவதும் கடந்தாண்டு 16 கோடியே 90 லட்சம் ஸ்மார்ட் போன்கள் விற்பனையாகியுள்ளது.
ஸ்மார்ட் போன்கள் மீதான மோகம் பொதுமக்களுக்கு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
இது விற்பனையிலும் எதிரொலித்துள்ளது. 2020ம் ஆண்டில், சர்வதேச அளவில் 15 கோடியே 20 லட்சம் ஸ்மார்ட் போன்கள் விற்பனையான நிலையில், கடந்தாண்டு அதன் எண்ணிக்கை 16 கோடியே 90 லட்சமாக உயர்ந்துள்ளது.
கடந்தாண்டில் ஸ்மார்ட் போன்களின் விற்பனை 11 சதவீதம் அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
5ஜி ஸ்மார்ட் போன்களுக்கான தேவை அதிகரித்திருப்பதே, விற்பனை உயர்வுக்கு காரணம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.