இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 22 லட்சம் வாட்ஸ் அப் பயனாளர்களின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
மத்திய அரசில் புதிய தொழில்நுட்ப விதிகள் நடைமுறைக்கு இணங்க நாட்டின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையிலான பதிவுகளை வெளியிடும் வாட்ஸ் ஆப் கணக்குகளை அந்நிறுவனம் முடக்கி வருகிறது.
அதன்படி செப்டம்பர் மாதத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த மாதாந்திர அறிக்கையை வாட்ஸ் ஆப் வெளியிட்டுள்ளது.
அதன்படி கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் விதிமுறைகளை மீறியது தொடர்பாக 22 லட்சத்து 9 ஆயிரம் வாட்ஸ் அப் பயனாளர்களின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.