தொழில்நுட்பம்

பேஸ்புக்கில் இருந்த பிழை... கண்டுபிடித்த இளைஞருக்கு ரூ.22 லட்சம் பரிசு தொகை

பிரபல முகநூலான இன்ஸ்டாகிராமில் தொழில் நுட்ப பிழையை கண்டுபிடித்த இந்திய மாணவனுக்கு ரூபாய் 22 லட்சம் பரிசு தொகை வழங்குவதாக முகநூல் நிறுவனம் அறிவித்திருக்கிறது.

Malaimurasu Seithigal TV

முகநூல் நிறுவனம் கடந்த மாதம் போட்டி ஒன்றை அறிவித்திருந்த நிலையில்,அதில் தங்கள் தளங்களில் இருக்கும் பிழைகளை கண்டுபிடிப்பவர்களுக்கு ரூபாய் 22 லட்சம் பரிசுத்தொகையாகவும் அறிவித்திருந்தது

மராட்டிய மாநிலம் சோலாப்பூரை சேர்ந்த கணிப்பொறியியல் மாணவர் மயூர்,அதனை சவாலாக ஏற்று,முகநூல் அறிவித்திருந்த போட்டிக்கு பங்கேற்பு தெரிவித்தார்.

பின்னர் அதில் பங்கேற்ற மயூர்,பிரபல முகநூலான இன்ஸ்டாகிராமில் ஒருவர் ”தனியாக கணக்கு வைத்திருந்தாலும் கூட, அதிலுள்ள ஒரு பிழை, எவரை வேண்டுமானாலும் தவறாக நுழைய அனுமதித்து பயனர்களின் புகைப்படங்கள், கதைகள், ரீல்ஸ் ஆகியவற்றை பார்க்க வைக்கிறது” என்ற தொழில்நுட்ப குறைபாட்டை கண்டுபிடித்தார்.

அதனை கண்டுபிடித்த இந்தியாவை சேர்ந்த மாணவர் மயூருக்கு 22 லட்சம் ரூபாய் பரிசு தொகையை வழங்குவதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து முகநூல் நிறுவனம் அந்த பிழையை கடந்த 15-ந் தேதி சரிசெய்ததோடு மட்டுமில்லாமல், எதிர்காலத்திலும் இது போன்ற தகவல்களை தங்களிடம் எதிர்பார்க்கிறோம் என மயூரிடம் முகநூல் நிறுவனம் கூறியுள்ளது.