தொழில்நுட்பம்

வட சென்னை அனல் மின் நிலையத்தில் உற்பத்தி பாதிப்பு!

Malaimurasu Seithigal TV

வட சென்னை அனல் மின் நிலையத்தில் கொதிகலனில் ஏற்பட்ட கசிவு காரணமாக மீண்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில், முதலாவது நிலையில் மூன்று அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தியும், இரண்டாவது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தி என மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 

இதில் முதலாவது நிலையின் 2வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக, மீண்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கொதிகலன் கசிவை சரிசெய்யும் பணிகளில் மின் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வட சென்னை அனல் மின் நிலையத்தில் இதுபோன்று அடிக்கடி பழுது ஏற்படுவதும் இதனால் மின் உற்பத்தி பாதிக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.