தொழில்நுட்பம்

உலகின் முதல் பறக்கும் காரின் சோதனை ஓட்டம் வெற்றி.,! எப்போது விற்பனைக்கு வரும்.?

Malaimurasu Seithigal TV

ஸ்லோவேக்கியாவில் பறக்கும் காரின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.

பேராசிரியர் ஸ்டீபன் க்ளென்  என்பவர் பெட்ரோலில் இயங்கும் நவீன ஏர்-காரை வடிவமைத்துள்ளார். பார்ப்பதற்கு பெராரி கார் போல் காட்சியளிக்கும் இந்த பறக்கும் கார் இரண்டேகால் நிமிடத்தில் விமானம் போன்று மாறி விடும். BMW இன்ஜின் பொருத்தப்பட்டுள்ள இந்த பறக்கும் கார்  வானில் 190 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் எனக் கூறப்படுகிறது. 

1000 கிலோ மீட்டர் தூரம் பறக்கக் கூடிய இந்த  காரின் சோதனை ஓட்டம் ஸ்லோவாக்கியாவில் உள்ள 2 விமான நிலையங்களுக்கு இடையே வெற்றிகரமாக நடைபெற்றது. 2 பேர் பயணம் செய்யக்கூடிய இந்த ஏர் காரை தயாரிக்க பதினேழரை கோடி ரூபாய் செலவானதாக பேராசிரியர் க்ளென் தெரிவித்துள்ளார். மேலும் கூடிய விரைவில் இந்த கார் விற்பனைக்கு வரும் என்று நம்பப்படுகிறது.