Google flight price tracking 
தொழில்நுட்பம்

“இனி Travel-க்கு பிளான் போட AI போதும்..” விமான டிக்கெட் முதல் ஹோட்டல் வரை - Google AI-ன் சிறப்பு அப்டேட்!

சமீபத்திய விலைகளுடன் உங்களுக்கான சிறந்த தேர்வுகளை AI பயன்முறை உங்களுக்கு தெரியப்படுத்தும்.

Vinvizhi Leninton

வெளிநாடுகளுக்கோ அல்லது வெளி ஊர்களுக்கோ சுற்றுலா செல்லவேண்டும் என்றால், அவ்வளவுதான் அதற்கென்றே தனியாக மணிக்கணக்கில் எப்போதும் செலவிட வேண்டும். எந்த விமானத்தில் பயணிக்கலாம்?, எவ்வளவு தூரம்?, எவ்வளவு விலை? என்று தலையே சுற்றிவிடும். ஆனால் AI அதை இன்னும் சுலபமாக்குகிறது. பயணிகள் தங்கள் பயணங்களை எந்தவித சிரமமும் இன்றி திட்டமிட உதவும் வகையில், கூகுள் தனது தேடல் அம்சமான AI பயன்முறையில் ஒரு புது விஷயத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆகஸ்ட் 27 அன்று அறிமுகமான இந்த புதிய அம்சம், விமானக் கட்டணங்களைக் கண்காணித்தல், மைல்களின் தூர விகிதங்களைக் காணுதல், அத்துடன் ஹோட்டல் முன்பதிவு செய்தல் உள்ளிட்ட அப்டேட்-டினை கொண்டுவந்துள்ளது. கூகுள் பயனர்கள், மாறிக்கொண்டே இருக்கும் விமானக் கட்டணங்களைக் கண்காணிக்கவும், பயனர்கள் தங்களின் கூகுள் சர்ச்-களுக்கு எந்த வித இடையூறும் இல்லாமல் விமான டிக்கெட்களின் விலையை அனுப்பும் ஒரு புது அப்டேட்-டினை கூகுள் கொண்டுவந்துள்ளது. நீங்கள் எப்போது, ​​எங்கு பயணிக்க விரும்புகிறீர்கள் என்பதை மட்டும் விவரித்தால் போதும், 300-க்கும் மேற்பட்ட விமான நிறுவனங்கள் மற்றும் பயணத் தளங்களிலிருந்து கிடைக்கும் சமீபத்திய விலைகளுடன் உங்களுக்கான சிறந்த தேர்வுகளை AI பயன்முறை உங்களுக்கு தெரியப்படுத்தும்.

எப்போது விமான டிக்கெட்களின் விலைக் குறையும் என நீங்கள் காத்திருந்தால், அந்த வேலையை இனி AI பார்த்துக்கொள்ளும். உங்களுக்காக விலைகளைக் கண்காணிக்க AI பயன்முறையைக் கேட்கலாம். நீங்கள் செல்ல நினைக்கும் இடம், நீங்கள் செல்ல நினைக்கும் அந்த தேதிகளுக்கான விலைகள் மாறினால், உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பப்படும். இதில், 180-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள பயணிகள் இப்போது அந்த விமான விலைகளை இந்த AI பயன்முறை மூலம் தெரிந்துகொள்ளலாம்.

தேடலில் உள்ள AI பயன்முறையானது, தேர்ந்தெடுக்கப்பட்ட 'லாயல்டி' திட்டங்களுடன் விமானப் பயணங்கள் மற்றும் ஹோட்டல் போன்றவற்றை காண்பிக்கும் திறனையும் இப்போது கொண்டுள்ளது. உதாரணமாக, உங்கள் மைல்களைப் பயன்படுத்தி ஒரு இடத்திற்குப் பயணிக்க விரும்புவதாக நீங்கள் AI பயன்முறையிடம் சொன்னால், அதற்குப் பொருத்தமான விமானங்களை முன்பதிவு செய்ய உங்களுக்கு எத்தனை மைல்கள் தேவை என்பதை அது உடனடியாகக் காண்பிக்கும். இதேபோல்தான் ஹோட்டல்களுக்கும் இது செயல்படும்.

தற்போது, ​​பின்வரும் 'லாயல்டி' திட்டங்கள் இதில் மட்டுமே ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன, அவைகள்: அலாஸ்கா ஏர்லைன்ஸ் / ஹவாய் ஏர்லைன்ஸ் அட்மாஸ் ரிவார்ட்ஸ், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ஏஅட்வான்டேஜ், சாய்ஸ் பிரிவிலேஜஸ், ஹில்டன் ஹானர்ஸ் மற்றும் விண்டம் ரிவார்ட்ஸ் ஆகியவை ஆகும்.

மேலும், பயனர்கள் இப்போது AI பயன்முறையில் நேரடியாக தற்போது ஹோட்டல்களை முன்பதிவு செய்யலாம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உங்கள் பயணத் தேதிகள், செல்ல வேண்டிய இடங்கள் மற்றும் ஹோட்டல் விருப்பங்களை AI பயன்முறைக்குத் தெரிவித்தால் மட்டும் போதும், அது ஒரு பாக்கேஜாக உள்ள பட்டியலிலிருந்து உங்களுக்கு ஒரு நல்ல தேர்வுகளை வழங்கும். நீங்கள் AI Mood மூலம் ஒரு ஹோட்டலை முன்பதிவு செய்யும்போது, ​​உங்கள் முன்பதிவிற்கு அந்த ஹோட்டல் அல்லது முன்பதிவுத் தளம்தான் பொறுப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

AI பயன்முறை மூலம் ஹோட்டல் முன்பதிவு அமைப்பில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள சில ஹோட்டல்கள் மற்றும் ஆன்லைன் பயண முகமைகளில் Booking.com, Choice Hotels International, Expedia, Hilton, Hotels.com, IHG Hotels & Resorts, Marriott International, Priceline, Trip.com மற்றும் Wyndham Hotels & Resorts ஆகியவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்