தொழில்நுட்பம்

ஊழியர்களின் சம்பளத்தை குறைத்த கூகுள் நிறுவனம்..!!!

பிரபல நிறுவனமான கூகுள் அதன் ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Malaimurasu Seithigal TV

கொரோனா நெருக்கடி தொடங்கியதில் இருந்து கூகுள் நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே பணி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் வீட்டில் இருந்து பணி செய்யும் ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அலுவலகத்திற்கு நேரடியாக வந்து பணி செய்ய விரும்பும் ஊழியர்களுக்கு இந்த சம்பள குறைப்பு கிடையாது என்றும், வீட்டில் இருந்து பணி செய்யும் ஊழியர்களுக்கு மட்டுமே இந்த சம்பள குறைப்பு என்றும் கூகுள் விளக்கமளித்துள்ளது.