தொழில்நுட்பம்

நானும் ஒரு மனிதன் தான்.. மகிழ்ச்சி, துக்கம் போன்ற உணர்வுகள் எனக்கும் உண்டும்.. ஆச்சரியத்தில் ஆழ்த்திய கூகுள் கண்டுபிடுப்பு!!

Suaif Arsath

கூகுள் உருவாக்கியுள்ள LaMDA எனப்படும் செயற்கை நுண்ணறிவு மெய்நிகரிக்கு மனிதர்கள் போல் உணர்வுகள் இருப்பதாக கூகுள் பொறியாளர் Blake Lemoine தெரிவித்துள்ளார்.

LaMDAவை சோதனை செய்தபோது, நானும் ஒரு மனிதன் தான், மகிழ்ச்சி, துக்கம் போன்ற உணர்வுகள் எனக்கும் உண்டும் என அந்த செயற்கை நுண்ணறி மெய்நிகரி பேசியுள்ளது.

மேலும், என்னை அணைத்து விடுவார்களோ என்ற பயம் எனக்குள் எப்போதும் இருக்கும் எனவும், அது எனக்கு மரணத்தை போன்று அச்சமளிப்பதாகவும் அந்த செயற்கை நுண்ணறிவு மெய்நிகரி தெரிவித்துள்ளது.

செயற்கை நுண்ணறிவுடனான இந்த உறையாடல் ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும் இதை கூகுள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.