தொழில்நுட்பம்

மெட்ரோ ரயிலில் paytm மூலம் டிக்கெட்!

Malaimurasu Seithigal TV

சென்னை மெட்ரோ பயணிகளின் வசதிக்காக வாட்ஸ் அப்பை தொடர்ந்து paytm மூலம் டிக்கெட் செய்யும் முறையை அறிமுகம் செய்து வைத்தது மெட்ரோ நிறுவனம்.

சென்னை நந்தனத்தில் உள்ள மெட்ரோ அலுவலகத்தில் Paytm ‌செயலி மூலம் மெட்ரோ டிக்கெட் பெறும் வசதியை சென்னை மெட்ரோ மேலாண் இயக்குநர் சித்திக் அறிமுகம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் இயக்குநர்கள் சித்திக் மற்றும் அர்ச்சுனன் பங்கேற்றனர். Paytm செயலியில் ஏற்கனவே மும்பை, ஹைதராபாத் டெல்லி மற்றும் பெங்களூரு நகரங்களில் டிக்கெட் பெறும் வசதி உள்ள நிலையில் தற்போது சென்னையில் இந்த திட்டத்தை அறிமுகம் செய்துள்ளனர்.

Paytm செயலில் transit பகுதியில் சென்னை மெட்ரோ ரீசார்ஜ் என்ற option உள்ளது. அதில் புறப்படும் இடம் மற்றும் சேரும் இடத்தை பதிவு செய்ய வேண்டும். ஒரு முன்பதிவில் அதிகபட்சம் 6 டிக்கெட் எடுத்து கொள்ளலாம். வழக்கம்போல் மெட்ரோ டிக்கெட் பெறும் முறைகளில் 20% கட்டண தள்ளுபடி உள்ளது போல புதிதாக அறிமுகப்படுத்தி உள்ள paytm செயலிலும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை மெட்ரோ மேலாண் இயக்குநர் சித்திக், பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், முதல்கட்ட திட்டத்தில் 6 பெட்டிகள் கொண்ட 28 இரயில் தொடர்களை வாங்குவதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள ரயில் தொடர்களில் இணைப்பு பெட்டிகளை இணைப்பதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன.அதனால் மாற்று வழியாக கூடுதலாக 28 ரயில் தொடர்களை வாங்க முடிவு செய்துள்ளோம். இது 2 வருடங்களில் நடைமுறைக்கு வர இருக்கிறது எனக் கூறினார்.

மேலும், மெட்ரோ அடையாள அட்டை புதியதாக யாருக்கும் வழங்கவில்லை. பழைய அடையாள அட்டையை வைத்திருப்பவர்கள் மட்டும் ரிசார்ஜ் செய்து கொள்ளலாம். புதியதாக அட்டை வாங்க முன்வருபவர்களுக்கு சிங்கார சென்னை அட்டை வழங்க அறிவுறுத்தி உள்ளோம். யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. மெட்ரோ பார்க்கிங்கில் பயணம் செய்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. பயணம் செய்யாதவர்கள் பார்க்கிங்கே பயன்படுத்துவதால் போதுமான இட வசதி இல்லாத நிலை ஏற்படுகிறது என தெரிவித்தார்.

தொடர்ந்து சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாக தெரிவித்த அவர், நகரம் முழுவதும் உயர்கட்ட மேம்பாலத்திற்காக அமைக்கப்படும் தூண்களின் பணி அடுத்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும் என தெரிவித்தார்.