தொழில்நுட்பம்

ஆப்பிள் நிறுவனத்தை முந்தும் மைக்ரோசாப்ட்..!!

ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி உலகின் மிக விலை மதிப்புமிக்க நிறுவனமாக மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷன் உருவெடுத்துள்ளது.

Malaimurasu Seithigal TV

ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி உலகின் மிக விலை மதிப்புமிக்க நிறுவனமாக மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷன் உருவெடுத்துள்ளது.

மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பங்கு மதிப்பு உயர்ந்ததை தொடர்ந்து உலகின் மிக விலை மதிப்புமிக்க நிறுவனமாக மைக்ரோசாப்ட் மாறியுள்ளது.

காலாண்டு சந்தை மதிப்பு முடிவுகளை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள நிலையில், இது தெரியவந்துள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பங்குகள் 4.2 சதவிகிதம் உயர்ந்துள்ள நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு 0.3 சதவிகிதம் அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது.