தொழில்நுட்பம்

பரபரவென விற்று தீர்ந்த பங்குகள்- ஒரே நாளில் ரூ.18,300 கோடி அளவுக்கு நிதி திரட்டிய பேடிஎம்

Malaimurasu Seithigal TV

பிரபல டிஜிட்டல் பரிவர்த்தனைத் தளமான பேடிஎம் முதல் முறையாக இன்று தனது பங்கு விற்பனையை தொடங்கிய நிலையில் முதல் நாளிலேயே 18, 300 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகள் விற்பனையாகியுள்ளது.

டிஜிட்டல் பரிவர்த்தனைத் தளமான பேடிஎம் நிறுவனத்தின் தலைமை நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் பங்கு விற்பனையின் மூலம் நிதி திரட்ட முடிவு செய்தது.

ஒரு பங்கின் விலை 2,080 முதல் 2,150 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டு இன்று முதல் பங்குகளின் விற்பனையை தொடங்கியது.

விற்பனையை தொடங்கிய சிறிது நேரத்திலேயே முதலீட்டாளர்களிடம் அமோக வரவேற்பை பெற்ற பேடிஎம் பங்குகள், 18,300 கோடி ரூபாய் அளவுக்கு நிதி திரட்டியுள்ளது. இதன் மூலம் நாட்டின் 50 பெறு நிறுவனங்களின் பட்டியலில் பேடிஎம் இணைந்துள்ளது.