ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் சூரியனின் புறவெளியை ஆய்வு செய்வதற்காக, ப்ரோபா-3 திட்டத்தின் கீழ் 2 செயற்கை கோள்களை வடிவமைத்தது.
பின்னர் இந்த இரு செயற்கை கோள்களையும் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டது. அதன்படி, ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி. - சி59 ராக்கெட் மூலம், நேற்று விண்ணில் ஏவப்பட இருந்தது. ஆனால் தொழிற்நுட்ப கோளாறு காரணமாக ராக்கெட் ஏவுதல் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் 2 செயற்கை கோள்களுடன், பி.எஸ்.எல்.வி.- சி59 ராக்கெட் சரியாக இன்று மாலை 4.04 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. இதனை இஸ்ரோ மையத்தில் இருந்த விஞ்ஞானிகள் கைகளை தட்டியபடி உற்சாகமாக கொண்டாடினர்.
இந்நிலையில் விண்ணில் பாய்ந்த ராக்கெட், செயற்கைகோள்களை வெற்றிகரமாக புவி வட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டதாக், இஸ்ரோ தலைவர் சோம்நாத் மகிழ்ச்சி தெரிவித்தார்.