தொழில்நுட்பம்

இனி த்ரெட்ஸிலும் DM's பண்ணலாம்?

Malaimurasu Seithigal TV

இணையவாசிகளின் புதிய செல்ல பிராணியாகிய த்ரெட் செயலியில், வரும் நாட்களில் Direct Messaging அம்சம் கொண்டு வரப்படும் என தகவல்கள் கசிந்துள்ளன.

சமீபத்தில் ட்விட்டருக்கு போட்டியாக, Thread (த்ரெட்) செயலியை மெட்டா வெற்றிகரமாக களமிறக்கியிருந்தது. ட்விட்டரில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளில் சிக்கித் தவித்து கொண்டிருந்த இணைய வாசிகளுக்கு, வரமாக காட்சியளித்த த்ரெட் செயலி, அறிமுகமான சில மணி நேரங்களிலேயே 100 மில்லியன் பயனர்களை பெற்று சாதனை படைத்திருந்தது.

இணைய வட்டாரங்கள், ட்விட்டருக்கு போட்டியாக களமிறக்கப்பட்டுள்ள த்ரெட் செயலியின் அம்சங்களில் ஆழ்ந்திருந்த நிலையில், தற்போது புதிய அம்சம் ஒன்று அப்டேட் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, தற்போது வரை த்ரெட்டில் பயனர்கள், தங்களுக்கு விருப்பமானவர்களை பின் தொடரவும், தங்களின் கருத்துக்களை பதிவு செய்துகொள்ளவும், அவற்றை மற்றவர்களுக்கு பகிர்ந்துகொள்ளவும் மற்றும் சில அம்சங்கள் குவிக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு பயனர் மற்றொரு நபருக்கு நேரடியாக குறுஞ்செய்தி அனுப்பும் (Direct Messaging's) அம்சம் மட்டும் இல்லாமல் இருந்தது.

இதனால், ஒருவர் மற்றொரு நபரிடம் பேச வேண்டுமெனில், மற்றொரு மெட்டா செயலியான இன்ஸ்டாகிராமிற்கு சென்று பேசும் நிலை இருக்கிறது. இது குறித்து முன்னதாகவே, இன்ஸ்டாகிராமின் தலைமை நிர்வாக அதிகாரி, ஆடம் மோசெரி  கூறுகையில், த்ரெட்டில் எப்பொழுதுமே, Direct Messaging's அம்சம் கொண்டுவரப்படாது என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது ஒரு தகவல் கசிந்துள்ளது. அது என்னவென்றால், விரைவில் Direct Messaging's அம்சம் கொண்டுவரப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இன்ஸ்டாகிராம் நிர்வாகத்தால், எப்பொழுது அந்த அம்சம் கொண்டுவரப்படும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. அத்துடன் சேர்த்து இன்னும் சில அம்சங்கள் மேம்படுத்தப்படலாம் என இணைய வட்டாரங்கள் தெறிவிக்கின்றன.