தொழில்நுட்பம்

கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்களுக்கு சம்மன்..!!

காங்கிரஸ் எம்.பி சசி தரூரை தலைவராகக் கொண்டு இயங்கும் நாடாளுமன்ற தகவல் தொடர்பு நிலைக் குழு கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

Malaimurasu Seithigal TV

காங்கிரஸ் எம்.பி சசி தரூரை தலைவராகக் கொண்டு இயங்கும் நாடாளுமன்ற தகவல் தொடர்பு நிலைக் குழு கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

அதில், பேஸ்புக் இந்தியா, கூகுள் இந்தியா நிறுவனங்கள் இன்று நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொண்டு சமூக ஊடகங்களில் பொதுமக்களின் பாதுகாப்பு உரிமைகள் தொடர்பாகவும், சமூக வலைதளங்களை, ஆன்லைன் செய்தித் தளங்களை தவறாக பயன்படுத்துவதை தடுப்பது எப்படி என்பது குறித்தும் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.

இதுதொடர்பாக பேஸ்புக், கூகுள் நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆஜராகி கருத்துக்களை முன்வைக்க உள்ளனர்.