இந்தியாவோட எஸ்யூவி (SUV) மார்க்கெட்ல ஒரு காலத்துல கொடி கட்டிப் பறந்த ரெனால்ட் டஸ்டர், இப்போ பல புது அப்டேட்களோட மறுபடியும் களத்துல இறங்கியிருக்கு. மிட்-சைஸ் எஸ்யூவி செக்மென்ட்ல கால் பதிச்சிருக்கிற இந்த கார், 10.49 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்) அப்படிங்கிற ஆரம்ப விலையில அறிமுகமாகியிருக்கு. அதே சமயம் 'ஆர் பாஸ்' (R Pass) வச்சிருக்கிற கஸ்டமர்களுக்கு ப்ரீ-புக்கிங் விலையா 10.29 லட்சம் ரூபாய்னு ஒரு சூப்பர் ஆஃபரையும் கம்பெனி கொடுத்திருக்காங்க. ஏற்கனவே புக்கிங் விறுவிறுப்பா போயிட்டு இருக்குறதால, இந்த காரோட டெலிவரி சீக்கிரமே ஆரம்பமாகும்னு எதிர்பார்க்கப்படுது. ஹூண்டாய் கிரெட்டா, மாருதி சுஸுகி விக்டோரிஸ் மற்றும் கியா செல்டோஸ் போன்ற கார்களுக்கு இது ஒரு பெரிய போட்டியா இருக்கும்னு சொல்லப்படுது.
வெளிநாட்டுல இருக்குற டஸ்டரை விட, இந்தியாவுக்காகவே ஒரு சில ஸ்பெஷல் மாற்றங்களோட இந்த கார் வந்திருக்கு. பாக்குறதுக்கு பழைய டஸ்டர் மாதிரியே இருந்தாலும், இதோட முன்பக்கம் (Front Fascia) ரொம்பவே புதுசா இருக்கு. குறிப்பா, புருவம் போன்ற டிசைன்ல இருக்குற டிஆர்எல் (DRL) விளக்குகள் இன்டிகேட்டராகவும் வேலை செய்யும். காரோட கிரில் மற்றும் பம்பர் டிசைன் கூட பிக்சல் ஸ்டைல் ஃபாக் லேம்ப்களோட ரொம்ப மாடர்னா இருக்கு. பக்கவாட்டுல இருந்து பார்த்தா 18 இன்ச் அலாய் வீல்கள், வீல் ஆர்ச்கள் மேல இருக்குற பிளாஸ்டிக் கிளாடிங்னு கார் ரொம்ப கெத்தா தெரியுது. பின்னாடி இருக்குற டோர் ஹேண்டில்கள் சி-பில்லர்ல (C-pillar) மறைச்சு வச்சிருக்காங்க, அப்புறம் ரூஃப் ரெயில்கள் கூட இந்த டிசைன்ல ஒரு அங்கமா இருக்கு. பின்னாடி இருக்குற எல்இடி லைட் பார் இந்த காருக்கு ஒரு ரக்கட் லுக்கைக் கொடுக்குது.
காரோட உள்பக்கம் அதாவது கேபின் ரொம்ப பிரீமியமா இருக்கணும்னு ரெனால்ட் ரொம்ப மெனக்கெட்டிருக்காங்க. டேஷ்போர்டு டிசைன்ல ரெண்டு ஸ்கிரீன்கள் கொண்ட லேஅவுட் மற்றும் த்ரீ-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் கொடுத்திருக்காங்க. சாஃப்ட்-டச் மெட்டீரியல்கள் மற்றும் கான்ட்ராஸ்ட் தையல்கள் கொண்ட சீட்கள் காருக்குள்ள ஒரு சொகுசான உணர்வைத் தருது. வசதிகளைப் பார்த்தா, 10.1 இன்ச் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர், ஆம்பியன்ட் லைட்டிங்னு அசத்தியிருக்காங்க. அதுமட்டும் இல்லாம, முன்னாடி இருக்குற சீட்கள்ல காத்தோட்டம் வர்ற வசதி (Ventilated seats), டூயல்-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் பவர்டு டெயில்கேட்னு எல்லா வசதிகளுமே இதுல இருக்கு.
பாதுகாப்புன்னு வரும்போது ரெனால்ட் இந்த தடவை ரொம்ப ஸ்ட்ராங்கா இறங்கியிருக்காங்க. ஆறு ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ஏபிஎஸ் (ABS), ஈபிடி (EBD) மற்றும் 360 டிகிரி கேமரான்னு ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கு. நாலு வீல்கள்லயும் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் எலக்ட்ரிக் பார்க்கிங் பிரேக் வசதி கொடுத்திருக்காங்க. இதையெல்லாம் விட முக்கியமா, லெவல் 2 ஏடாஸ் (Level 2 ADAS) தொழில்நுட்பம் இதுல இருக்குறது ஒரு பெரிய பிளஸ் பாயிண்ட்.
இன்ஜின் ஆப்ஷன்களைப் பார்த்தா, மொத்தம் மூணு விதமான சாய்ஸ் இருக்கு. டாப் வேரியண்ட்ல 1.8 லிட்டர் ஹைப்ரிட் இன்ஜின் இருக்கு, இது 160 பிஎச்பி பவரை கொடுக்கும். அடுத்து 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் இருக்கு, இதுவும் 160 பிஎச்பி பவரை கொடுக்கும், இதுல மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என ரெண்டு ஆப்ஷன்களும் இருக்கு. பேஸ் மாடல்ல 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் இருக்கு, இது 100 பிஎச்பி பவரை கொடுக்கும். மொத்தத்துல புது டஸ்டர் இந்திய எஸ்யூவி மார்க்கெட்ல ஒரு பெரிய ரவுண்ட் வரும்னு எதிர்பார்க்கப்படுது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.